திருமண வரவேற்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

227
Advertisement

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் பொக்லைன் எந்திரத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் இணையத்தில் வைராகியுள்ளது.

திருமணமும் அதைச் சார்ந்த வைபவங்களும் இனிமையாக இருக்கும். உறவினர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் என அனைவரையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்தித்து மகிழ இனிய சந்தர்ப்பமாக திருமண நிகழ்வுகள் இருக்கும்.

அதனால் தங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமாக நடத்த ஒரு தம்பதியினர் முடிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து திறந்த வெளியில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேடையில் உட்கார வேண்டிய மணமக்கள் பொக்லைன் எந்திரத்தின் எக்ஸ்கேவேட்டர் பகுதியில் உட்கார்ந்தனர்.

எக்ஸ்கேவேட்டரை மேடையாக்க விரும்பிய பொக்லைன் எந்திரத்தின் ஆபரேட்டர், அதன் பட்டனை ஆன் செய்தார். இதனால் மணமக்கள் உயரத்திற்குச் சென்றனர். உயரமான எக்ஸ்கேவேட்டரில் இருந்து அனைவரிடமும் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டிருந்தனர்.

அப்போது வழக்கம்போல பணியில் ஈடுபட்டுள்ளதாக நினைத்த ஆபரேட்டர் எக்ஸ்கேவேட்டரின் பட்டனை இயக்கியுள்ளார். அதையடுத்து மணமக்கள் கீழே குப்புற விழுந்துவிட்டனர். அதைப் பார்த்துக்கொண்டிருந்த விருந்தினர்கள் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தாலும், சுதாரித்துக்கொண்டனர்.

திருமண நிகழ்ச்சியில் பணிபுரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளாத பொக்லைன் ஆபரேட்டரின் செயலால் வேடிக்கையாக அமைந்துவிட்டது மகிழ்ச்சியான நிகழ்ச்சி.

தற்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது இந்தப் புதுமையான வரவேற்பு நிகழ்ச்சி.