வெள்ளை வெங்காயத்துக்கு கிடைத்த இராஜமரியாதை

323
Advertisement

வெள்ளை வெங்காயத்து புவிசார் கிடைத்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

வெங்காயப் பிரியர்கள் நிறைந்துள்ள ஒரு நாடு எதுவெனக் கேட்டால், இந்தியா என சட்டென்று சொல்லிவிடலாம்.

வெங்காயம் இன்றி இந்திய சமையல் முழுமை பெறுவதில்லை. அதிலும் வட இந்தியாவில் அரசியல் நிலைப்பாட்டையே புரட்டிப்போடும் அளவுக்கு வல்லமை கொண்டது வெங்காயம். அந்தளவுக்கு சமையலோடு பின்னிப் பிணைந்து வெங்காயம்.

வெங்காயம் சிவப்பு, வெள்ளை என்று இரண்டு நிறங்களில் விளைவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிவப்பு நிற வெங்காயமே சமையலில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. வெண்ணிற வெங்காயம் மருத்துவ காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா மாநிலமே இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ராய்க் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டதாகக் கருதப்படும் அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்குத் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
மும்பையில் உள்ள காப்புரிமை பதிவாளர் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். கொங்கண் வேளாண் பல்கலைக்கழகமும், மகாராஷ்டிரா மாநில வேளாண்துறையும் அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்தன.

இன்சுலின் சுரக்க வைப்பதிலும், உடலிலுள்ள கெட்ட கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இதய நோய்களைக் குணப்படுத்துவதிலும் அலிபாக் வெள்ளை வெங்காயம் பெரும் பங்காற்றுகிறது என்று 1883 ஆம் ஆண்டு அரசுக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலிபாக் வெள்ளை வெங்காயம் பயிரிட்டு ஒரு ஏக்கருக்கு 2 லட்ச ரூபாய் வருமானம் பெறலாம் என்கின்றனர் விவசாயிகள்.