ஒரு பாட்டில் தண்ணீர் விலை 45 லட்ச ரூபாய்

434
Advertisement

ஒரு பாட்டில் தண்ணீரின் விலை 45 லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

நம்பித்தான் ஆக வேண்டும்.

கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை என்கிறீர்களா…..உண்மை அதுதான்.

நம் நாட்டில் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அதிகபட்சமாக 80 ரூபாய்வரை விற்கப்படுகிறது. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிஜு நாடுகளில் முக்கால் லிட்டர் அதாவது, 750 மில்லி லிட்டர் தண்ணீர் 60 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகின் விலை உயர்ந்த இந்தத் தண்ணீர்ப் பாட்டில் அக்வா டி கிறிஸ்டில்லோ டிரைபியூட்டோ எ மோடிக்லியானி என்னும் பெயரில் விற்கப்பட்டு வருகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 45 லட்ச ரூபாய் ஆகும்.

அயல்நாடுகளில் ஷாம்பெயின், ஒயின், சிங்கிள் மால்ட் விஸ்கி போன்றவை சில லட்சங்கள்முதல் கோடிக்கணக்கான ரூபாய்வரை விற்பனை செய்யப்படுவது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

ஆனால், தண்ணீர் எதற்காக இந்த விலைக்கு விற்கப்படுகிறது பலருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

அந்தக் கேள்விக்குப் பதில்…

முதலில் தண்ணீர் நிரப்பட்டுள்ள பாட்டில் 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக, இந்த பாட்டில் வடிவமைப்பதில் உலகப் புகழ்பெற்றவரான பெர்ணாண்டோ அல்டாமிரானோ இந்தத் தண்ணீர் பாட்டிலின் தோற்றத்தைக் கவர்ச்சிகரமாக உருவாக்கியுள்ளார்.

இதுதவிர, தண்ணீரின் சுவையும் ஆற்றலும் அபரிமிதமாக உள்ளதாம்.

அந்தப் பாட்டிலுக்குள் நிரப்பப்பட்டிருப்பது சுனை நீராம்….
கேட்கவே பிரம்மிப்பாக உள்ளதல்லவா?

எனக்கு தலை சுத்துது ஒரே படபடப்பா வருது மயக்கம் வர்றதுக்கு முன்னால… அந்தப் பாட்டில் தண்ணிய என் முகத்துல கொஞ்சம் தெளிங்க அண்ணாச்சி….