மாணவனை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் செல்லப் பிராணி

251
Advertisement

தாயைப்போல பள்ளி மாணவனை அழைத்துச்செல்லும்
நாய் பற்றிய வீடியோ சமூக வலைத்தளவாசிகளைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

செல்லப் பிராணிகளில் நாய்களுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு.
வீட்டுவேலை செய்வது, கடைக்குச் சென்றுவருவது,
வியாபாரத்தில் உதவியாக இருப்பது என எஜமானருக்கு
விசுவாசமாக இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதனால், செல்லப்பிராணியாக விளங்கும் நாய்கள்
குடும்ப அங்கத்தினராகவே கருதப்படுகிறது. இதற்கு
வலுசேர்க்கும் வகையில் நாம் இங்கு காணும் வீடியோ அமைந்துள்ளது.

பள்ளிக்குச் சென்ற தங்கள் மகனை மாலையில் வரவேற்பதற்காக
பள்ளி வாகனம் வந்து நிற்கும் இடத்தில் பெற்றோர்கள்
காத்திருப்பதைப்போல நாய் ஒன்று காத்திருக்கிறது.

பள்ளி வாகனம் வருவதை அடையாளம் கண்டுகொண்டதும்
வாலை ஆட்டியும் துள்ளிக் குதித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
வாகனத்திலிருந்து வெளியே வரும் மாணவனும் செல்லப்பிராணியைப்
பார்த்து உற்சாகமாகிறான். இருவரும் சந்தோஷத் துள்ளலுடன்
வீட்டுக்குச் செல்கின்றனர்.