பீகாரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால், குடும்பத்தினர் ஆத்திரமடைந்து காவல்நிலையத்தை சூறையாடினர்.
பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் இயங்கிவரும் கன்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக ஷிவம் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் காவல்நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த குடும்பத்தினர், கிராம மக்களுடன் சேர்ந்து காவல்நிலையத்தை சூறையாடினர். இது காவல் நிலையத்தில் நடந்த மரணம் என்பதால், தலைமைக் காவலர் உள்பட 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று முசாஃபர்பூர் காவல் கண்காணிப்பாளர் சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.