செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்தந்த வார்டுகளிலும் ஒவ்வொரு தெருவிலும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் விதமாக அடிபம்பு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட குண்டூர் பகுதியில் செங்கல்பட்டு நகராட்சி மூலமாக சாலை ஓரத்தில் அமைக்க பட்டிருந்த அடிபம்பை மறைத்து சிமெண்ட் மூலமாக சாய்தளம் அமைக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாபு என்பவர் தனது சுயநலத்திற்காக வீட்டுக்குள்ளே வாகனங்களை ஏற்றிச்செல்ல ஏதுவாக சிமெண்டினால் பாதிக்கு மேல் அடிபம்பினை மூடி பம்பின் கைப்பிடி மட்டும் தெரியுமளவிற்கு மூடியுள்ளனர். இதனை ஆய்வு மேற்கொண்டு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.