உலகிலேயே பழமையான பேய்ப் படம்

379
Advertisement

உலகிலேயே மிகப்பழமையான பேய்ப் படம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3,500 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த பேய்ப் படம் இங்கிலாந்து நாட்டின் அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஆண் பேய் ஒன்றின் இரு கைகளையும் ஒரு கயிற்றால் கட்டி மற்றொரு பெண் பேய் இழுத்துச்செல்வதுபோல அந்தப் பேய்ப் படம் உள்ளது. இது தோழனைத் தேடும் பேயாகக் கருதப்படுகிறது.

பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தப் பேய்ப் படத்தை இரண்டாண்டுகளுக்குமுன்பு வடக்கு கரோலினா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுசெய்தபோது இரும்பு யுகத்தைச் சேர்ந்த பானைகள், ரத்தினங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இவை கிமு 587/ 586 ஆம் ஆண்டைச் சேர்ந்தது

இந்தப் பேய்ப் படம் பாபிலோன் நகரிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இன்றைய ஈராக் நாட்டின் தலைநகராக ஒருகாலத்தில் பாபிலோன் விளங்கியது.

பேய் பற்றிய பயம் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கும்போல.