குன்றிலிருந்து விழுந்த மனிதன் மறைந்துபோன மர்மம்

187
Advertisement

100 அடி உயரக் குன்றிலிருந்து கீழே விழுந்த மனிதன்
காணாமல் மறைந்துபோன மர்மம் காவல்துறையைக்
குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பரபரப்பான இந்த சம்பவம் புரியாத புதிராக உள்ளது.

இங்கிலாந்தின் டோர்செட் நகரில் கடற்கரை அருகேயுள்ள
100 அடி உயரமுள்ள குன்றின் உச்சி விளிம்பில் ஒருவர் குடி
போதையில் தள்ளாடியபடி வருவதை அங்கிருந்த சிலர்
பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள் காவல்துறைக்குத்
தகவல் தெரிவித்தனர்.

Advertisement

அங்குவந்த சவுத்போர்ன் கடலோரக் காவல்படை ஹெலிகாப்டர்
மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியது. எங்குதேடியும் நிலை
தடுமாறி கீழேவிழுந்த அந்த மனிதனைக் கண்டுபிடிக்க முடியாமல்
போலீஸ் திகைத்தது.

அதிநவீன பைனாகுலர் மூலம் தேடியும் அந்த மனிதன் எங்கு
சென்றான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேசமயம்,
அந்த மனிதர் குணமடைந்து சென்றுவிட்டதாக போலீஸ் விசாரணையில்
தெரியவந்துள்ளது.

என்றாலும் அவர் யார், எப்படிப் பிழைத்தார், எங்கு சென்றார்
என்பது தெரியாமல் திகைப்பில் உள்ளனர் போலீசார்.

அந்த மனிதன் தப்பியோடிய தடயத்தையும் கண்டுபிடிக்க
முடியாமல் காவல்துறை குழப்பத்தில் ஆழ்ந்துபோயுள்ளது..
சமூக வலைத்தளங்களில் தற்போது இந்த சம்பவம் வைரலாகி
வருகிறது.