கங்காருவுடன் மனிதர் சண்டை போட்ட வீடியோ
வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விநோதமான இந்தச் சண்டை ஆஸ்திரேலியாவில்
அண்மையில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள கிளிஃப் டெஸ் என்கிற நபர் தனது வீட்டில்
நாய்களை வளர்த்துவருகிறார். அந்த நாய்கள் அவரின்
வீட்டுத்தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தன. அப்போது
அங்குவந்த 6 அடி உயரமுள்ள கங்காரு, அங்கிருந்த நாய்களைத்
தாக்கத் தொடங்கியது.
அதனைப் பார்த்த டெஸ் தனது செல்லப்பிராணிகளைக்
காப்பாற்றுவதற்காக ஓடிவந்தார். ஆனால், கங்காரு அவரை
விரட்டிவிரட்டித் தாக்கத் தொடங்கியது. கங்காருவை எதிர்த்துத்
தாக்கத் தொடங்கிய அவர் தடுமாறி கீழேவிழுந்தார்.
ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு எழுந்த டெஸ் கங்காருவுடன்
கட்டிப்புரண்டு சண்டை போட்டார். பின்னர், மல்யுத்தம் நடத்துவது
போல் கங்காருவை கீழே தள்ளி அதன்மீது ஏறி உட்கார்ந்துகொண்டார்.
இதனால் அடங்கிப்போனது கங்காரு. தப்பித்தார் டெஸ்.