மே மாதம் முதல் உயரும் சிகரெட் விலை! எவ்வளவுன்னு தெரியுமா?

வரவிருக்கும் மே மாதம் முதல் சிகரெட் விலைகள் சுமார் 17% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகம் விற்பனையாகும் Gold Flake Premium போன்ற பிராண்டுகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படும். தற்போது ₹115க்கு விற்கப்படும் ஒரு பாக்கெட், ₹135க்கும் மேல் உயர வாய்ப்புள்ளது. பிரீமியம் சிகரெட்டுகள் மட்டுமின்றி, குறைந்த விலையிலான சின்ன சிகரெட்டுகளும் விலை உயர்வை சந்திக்கலாம்.

இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அரசாங்கம் கொண்டு வந்த Central Excise Bill 2025 குறிப்பிடப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ், சிகரெட்டுகளுக்கு 40% GST உடன் சேர்த்து கலால் வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 75mm-க்கு மேற்பட்ட நீளமுள்ள சிகரெட்டுகள் மீது அதிக வரிச்சுமை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பு செலவுகள் 22% முதல் 28% வரை உயர்ந்துள்ளன. இந்த கூடுதல் செலவினை நிறுவனங்கள் நேரடியாக நுகர்வோரிடமே மாற்றுகின்றன.

இதற்கிடையில், பங்குச் சந்தையில் சிகரெட் நிறுவனங்களின் பங்குகள் வேகமாக உயர்ந்துள்ளன. ITC Limited நிறுவனத்தின் பங்கு சுமார் 4% உயர்ந்துள்ளது. அதேபோல் Godfrey Phillips India பங்குகள் 7.80% வரை லாபத்தில் வர்த்தகமாகின. மதியம் 3 மணி நிலவரப்படி ITC பங்கு ₹316.30க்கும், Godfrey Phillips பங்கு ₹2,281.20க்கும் வர்த்தகமானது.

நிபுணர்கள் கூறுவதாவது, சிகரெட் பழக்கத்தை உடனடியாக கைவிட முடியாததால், விலை உயர்ந்தாலும் மக்கள் வாங்குவதைத் தொடருவார்கள். ஆரம்பத்தில் விற்பனை சற்று குறைந்தாலும், உயர்ந்த விலையால் நிறுவனங்கள் அதனை சமநிலைப்படுத்தும். இதனால் எதிர்காலத்திலும் இந்த நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், புகையிலைப் பயனர்கள் தங்களின் மாதச் செலவுத்திட்டத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

Related News

Latest News