ஹாட் சிப்ஸால் தன்னை மூடிமறைத்த மனிதர்

301
Advertisement

https://www.instagram.com/reel/CVhbDDNlsSV/?utm_source=ig_web_copy_link

ஹாட் சிப்ஸால் தன்னை மூடிமறைத்த மனிதரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சஃர்பர் பேரடைஸ் கடற்கரையில் ஒருவரை கழுத்துவரைப் புதைத்து அவரைச் சுற்றி ஆயிரம் டாலர் மதிப்புள்ள சிப்ஸ்களைப் பரப்பியுள்ளனர் நகைச்சுவை இரட்டையர்களான மைக்கேல், மார்ட்டின். அதைப் பார்த்துப் பறவைகள் சிப்ஸை உண்ண வருகின்றனவா என்பதை அறிந்துகொள்ளும் முயற்சியாக இந்தச் செயலை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நகைச்சுவை இரட்டையர்களான மைக்கேல், மார்ட்டின் இருவரும் விநோதமான பொழுதுபோக்குள், சவால்கள், வழக்கத்துக்கு மாறான சமூகப் பரிசோதனைகள், சண்டைக் காட்சிகள், நகைச்சுவை ஓவியங்கள் போன்றவற்றுக்கான நிகழ்ச்சிகளை நடத்தி ஆன்லைனில் பகிர்கின்றனர்.

அந்த வகையில் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்புவதற்கான முயற்சியாக இந்தச் செயலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

பறவைகளை நம்ப வைக்கமுடியுமா என்பதற்காக நடத்தப்பட்ட இந்த சோதனை நிகழ்வில் வெற்றிபெற்றார்களா என்பதை வீடியோவைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.