விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளராக இருந்த, ஆதவ் அர்ஜூனா அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில், நடிகர் விஜயை ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தற்போது ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும், அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.