என்ன ஆச்சரியமா இருக்கா…உண்மைதாங்க..
எப்படின்னா…
சிங்கம் மணிக்கு எம்பது கிலோமீட்டர் வேகத்துல
தான் ஓடும். ஆனா, சிறுத்த 130 கிலோமீட்டர்
வேகத்துல ஓடும். அதனாலதான், வேகமா ஓடும்
விலங்குகள் பட்டியல்ல சிங்கத்த சேத்துக்கல.
சிங்கம் புத்திசாலியா… கெடயாதுங்க…
அடுத்த வேள உணவுக்கு சேத்து வைக்குமா…
அப்படி ஒரு எண்ணமே சிங்கத்துக்கு கெடயாது.
பசிச்சாதான் வேட்டயாடும்.
அப்புறம் எப்படி சிங்கம் காட்டுக்கு ராஜா ஆச்சு?
அதுதாங்க தன்னம்பிக்கை.
சிங்கத்து முன்னால யான நின்னாலும் சரி,
முதல கிடந்தாலும் சரி…
அதப் பாத்து சிங்கம்
ஆஹா…எனக்கு சாப்பாடு கிடைச்சிடுச்சி
அப்படின்னுதான் நெனய்க்குமாம்.
தன்னவிட பத்து மடங்கு அதிகம் எடைகொண்ட
யானயப் பாத்தோ, அகப்பட்டா தப்பிக்கமுடியாத
முதலையைப் பாத்தோ அணுவளவும் சிங்கம் பயப்படாது.
பயம்ங்கறது சிங்கத்தோட அகராதியிலேயே கெடயாது.
பசிச்சா எனக்கு சாப்பாடு கெடைக்கும்ங்கற
அபரிமிதமான நம்பிக்கைதான் சிங்கத்தோட பலமே.
அப்படின்னா…ராஜா ஆகுற அளவுக்கு தலைமைப் பண்பு
கொண்டதா சிங்கம்?
அப்படியெல்லாம் எதுவுமே கெடயாதுங்க..
எந்த மிருகத்தயும் பின்தொடர்ந்துபோய் தனக்கான
இரையைப் பெறாது…
வாய்ப்பு வர்றவரைக்கும் பொறுமையாக இருக்கும்.
வந்த வாய்ப்ப விடவே விடாது. பசின்னு வந்துட்டா அதே
சிந்தனயிலயே இருந்து எதிர்ல வர்ற மிருகத்த ஒரே
அடியில வீழ்த்திரும்.
வாய்ப்ப விடாத குணமும் ஒரே அடியில வீழ்த்துற
வலிமையுந்தான் சிங்கத்தோட பலம். தைரியம்.
தன்னம்பிக்கையும் மனவலிமையும்தான் வெற்றியைத்
தேடித் தரும். உங்களோட வலிமையும் தைரியமும்
என்னங்குறது உங்களுக்குத் தான் தெரியும்.
அடுத்தவங்களுக்குத் தெரியாது. அதனால அடுத்தவங்க
தயவ எதிர்பாக்கமா உங்க தன்னம்பிக்கையால
ஜெயிக்கலாம். வாய்ப்புகள் வரும்போது அதைத்
தவறவிடாம பயன்படுத்தினா வெற்றி நிச்சயம்.
சிங்கம் சிங்கிளாத்தான் வரும் பன்னிங்கதான்
கூட்டமா வரும்