சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் காரில் வந்த பெண்களை மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் டோல்கேட்டை கடந்து செல்வதற்காக கட்சி கொடியை பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்றபடி கட்சிக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.