வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பெட்டியில் “மழையைக் கண்டு அச்சம் வேண்டாம். அதிக மழை பெய்தால் அரசு சமாளிக்கும். தமிழகத்தைப் பொறுத்த அளவில் மழையின் தேவை இருக்கிறது. மழை அதிகமாக பெய்தால் அதை சமாளிக்கக்கூடிய தைரியம் அரசுக்கு இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.