Thursday, July 3, 2025

கேளிக்கைக்கு வேலி போட்ட திரையரங்கம் ! 

தங்களுக்கு பிடித்த  நட்சத்திரங்களின் படங்களுக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள், நட்சத்திரங்களின் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் மாஸாக வைரலாக்குவர். அதோடு பட ரிலீஸ் நெருங்க நெருங்க உச்சகட்ட வெறித்தனத்தின் அடையாளமாக மற்றோரு பிரபலத்தை சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சிப்பர். அதோடு ரிலீஸ் அன்று திரையரங்கு அமைந்ததுள்ள பகுதியே அல்லோலப்பட்டு விடும்.

முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அதன் விளைவாக முதல் நாள் பல திரையரங்குகள் அலங்கோலமாகின. அதோடு அந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஓ சொல்ட்ரியா ஊ ஊ சொல்ட்ரியா பாடலுக்கு அடிமையான ரசிகர்கள் பலர் திரை மேடையில் ஏறி சமந்தாவின் ஸ்டேப் போட்டு அதிரவிட்டனர். இதனால் பல ஸ்கிரீன்கள் கிழிந்து தொங்கின.

இந்நிலையில் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பாக  ராம் சரண், என்.டி.ஆர் என இரு பெரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடித்த ஆர் ஆர் ஆர் படம்  வரும் 25-ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது . மூவி தரப்போகும் வசூலை விட அதன் ரசிகர்களால் உண்டாக உள்ள நஷ்டம் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு உள்ளனர் போல  அந்தவகையில் தெலுங்கானாவில் உள்ள திரையரங்கு ஒன்றில் இருக்கைக்கு திரைக்கு இடையே விலங்குகள் புகாமல் இருக்க போடப்படும் முள் வெளியை போட்டுள்ளனர். ஏற்கனவே இந்த திரையரங்கில் புஷ்பா படம் திரையிட்டபோது ஸ்கிரீன் கிழிந்த சம்பவம் மீண்டும் நிகழலாம் இருக்க இந்த முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news