ஸ்வச் பாரத் தூதுவரான யானை

641
Advertisement

யானை ஒன்று தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர்போல செயல்பட்ட வீடியோ இணையதளவாசிகளைக் கவர்ந்திழுத்து வருகிறது.

இந்திய அரசு 1999 ஆம் ஆண்டில் ஊரகத் துப்புரவுத் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டம் பல கட்டங்களுக்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டில் தூய்மை இந்தியா இயக்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஸ்வச் பாரத் அபியான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் நோக்கம் திறந்த வெளி மலங்கழித்தல் இல்லாத நாடாக மாற்றுவதாகும்.

இதன் இரண்டாம் கட்டமாகத் தூய்மை இந்தியா திட்டம் 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. குப்பைகளில்லாத நகரங்களை உருவாக்குதல், கழிவுநீரை சுத்தப்படுத்தி மறுபடியும் பயன்படுத்த வழிசெய்தல், சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்தல் போன்றவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்திற்கு வலுசேர்ப்பதுபோல யானை ஒன்று தரையிலுள்ள குப்பைகளை எடுத்து அதற்கான வாளியில் போடுவது வியப்படைய வைக்கிறது. ஆனால், அது ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் நிகழ்ந்துள்ளது.

ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் யானை ஒன்று இப்படி புத்திசாலித்தனமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.