நீண்ட கால சந்தேகத்துக்கு விடை கிடைச்சாச்சு-
ரொம்ப வருஷமா கோழியில இருந்து முட்டை வந்ததா?
முட்டையிலருந்து கோழி வந்ததான்னு மண்டயப் போட்டுக்
குழப்பிக்கிட்டு இருந்தோம்ல. இனிமே அந்தக் குழப்பமெல்லாம்
வேண்டாம்.
விஞ்ஞானிகளயும் இந்தக் கேள்வி துளைச்சி எடுத்துச்சு.
இந்தக் குழப்பத்த எக்ஸ்ட்ரா ரெண்டு ஆம்ப்ளேட் சாப்ட்டு
போக்கியிருப்பீங்க… ஆனா… விஞ்ஞானிகள் அப்படியா…
ஒடனே ஒரு முடிவெடுத்திருப்பாங்களோ…இந்த சந்தேகத்துக்கு
விட கண்டுபிடிக்காம முட்டைய சாப்பிடக்கூடாதுன்னு முடிவெடுத்து
இருப்பாங்களோ….
இங்கிலாந்துல ஷெஃபீல்டுங்கற நகர்ல இருக்கற ஷெஃபீல்ட்
பல்கலைக் கழகம், ஆஸ்திரேலியாவுல இருக்கற வார்விக்
பல்கலைக் கழகம்… இந்த ரெண்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகளும்
கோழிதான் மொதல்ல வந்ததுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க…
இதுக்கு அவங்க குடுத்த விளக்கம் என்ன தெரியுமா…
முட்டைக் கூடுகளை உருவாக்கும் OVOCIEDIDIN 17 அல்லது
OC17ங்கற ஒரு புரதம் கோழியின் கருப்பையில் மட்டுமே இருக்குன்னு
கண்டுபிடிச்சிருக்காங்க.. அதனால முட்டை, கோழி உள்ளுக்குள்ளதான்
உருவாகியிருக்க முடியும்னு உணர்ந்திருக்காங்க…
இந்த ஓசீ 17ங்கற புரதம், முட்டையோட ஓடு வேகமா வளர்றதுக்கு
ஊக்கியா செயல்படுதாம். அப்புறமா இந்தக் கடினமான ஓட்டுக்குள்ள
குஞ்சு உருவாகுது. மஞ்சள் கருவும் அதச் சுத்தியிருக்கற திரவமும்
இருக்க இந்த ஓடுதான் கவசமா இருக்கு.
இத நிரூபிக்கறதுக்காக கம்ப்யூட்டர்ல இந்த மூலக்கூறு படத்த
வடிவமைச்சிருக்காங்க… இந்த ஓசீ மூலக்கூறுதான் கால்சியம்
கார்பனேட் உருவாகக் காரணமா இருக்காம்.
எப்படின்னா கோழியோட வயித்துல கால்சியம் துகள்களா உருவாகுதாம்.
இந்த ஓடு உருவான பிறகுதான் மஞ்சள் கருவும் வெள்ளக் கருவும் உருவாகுதாம்.
அதனால கோழிதான் முதல்ல வந்துருக்கணும்னு தீர்மானமா சொல்லீருக்காரு
பேராசிரியர் கோலின் ஃபிரீமேன்…
இனிமே, கவலைப்படாம முட்டை சாப்டுங்க… பச்சையா குடிச்சிட்டு
ஜிம்முல போய் உடம்ப தேத்திக்கிங்க….அவிச்சி சாப்ட்டு ஆரோக்கியமா
இருங்க…. பொரிச்சி சாப்பிட்டு பூரிப்பா இருங்க…. ஆம்ப்ளேட் சாப்ட்டு
ஆனந்தமா இருங்க….
வீணா உங்க மூளைய போட்டுக் குழப்பி டபுள் ஆம்ப்ளேட் ரெண்டு
மூணுன்னு அதிகமா சாப்ட ஆரம்பிக்காதீங்க….
ஏன்னா…
ஒரு நாளைய்க்கு ஒரு முட்டையதான் உடம்பு ஏத்துக்குமாம்.
அதிகமா சாப்பிட்டா அது உடம்புல சேராம வெளிய தள்ளிடுமாம்…
காச எதுக்கு வீணாக்குறீங்க…ஒண்ணு போதும் உடம்ப தேத்த…