தன் குட்டிகளுக்கு சாப்பாடு வைத்ததற்காக நன்றி சொன்ன நாய்

194
Advertisement

நாய்க்குட்டிகள் பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது, வீடுகளில் நாய்களை பிள்ளை போல வளர்த்து வருகின்றனர்.  அதே சமயம் தெருக்களில் இருக்கும் நாய்களை யாரும் கண்டுகொள்வதில்லை, அவைகள் உணவிற்கு தடுமாறுகின்றன.  ஒரு பெண் தாயுணர்வோடு பசியில் தவித்து கொண்டிருக்கும் நாய்க்குட்டிக்கு உணவளித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பலரது இதயங்களையும் கவர்ந்து வருகிறது.  

அந்த வீடியோவில் பெண் ஒருவர் தரையில் படுத்துக்கொண்டிருக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.  ஒரு பையில் உணவை வைத்துக்கொண்டு அந்த நாய்க்குட்டிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணவை அள்ளி போடுகிறார்.  அப்போது அவர் அருகில் நின்ற அந்த நாய்க்குட்டிகள் தாயானது அப்பெண்ணின் பின்னல் சுற்றிக்கொண்டே அவர் உணவு பரிமாறும்போது நன்றி கூறும் விதமாக அப்பெண்ணின் கைகளை பற்றிக்கொண்டு, முகத்தை அவர் கைகளில் பதிக்கிறது.இந்த வீடியோ காண்போரின் இதயங்களை நெகிழ செய்துள்ளது.