Access Now அமைப்பு, 2024ல் அதிக முறை இணைய சேவை முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஆண்டு முழுவதும் 84 முறை இணைய சேவை முடக்கங்கள் நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மணிப்பூர் மாநிலத்தில் 21 முறை சேவை முடக்கம் நடந்துள்ளன. இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மியான்மரில் 85 முறை இணைய சேவை முடக்கங்கள் நடந்துள்ளது.