வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில், டயர் வெடித்து கார் தாறுமாறாக ஓடிய விபத்தில், காரை ஓட்டிச்சென்ற மருத்துவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
ஓசூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் குருப்பிரசாத், வேலூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர், பணி முடிந்து காரில் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் கார் தாறுமாறாக ஓடி, தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு நின்றது.
அப்போது, காரின் முன்பக்க சக்கரம் கழண்டு சர்வீஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது விழுந்தது. இதில், நியூடவுன் பகுதியைச்சேர்ந்த காய்கறி வியாபாரி ராஜா, அவரது மகள் அனிதா இருவரும் காயம் அடைந்தனர்.
கார் ஓட்டிச் சென்ற மருத்துவர் சிறு காயங்கள் தப்பினார்.அருகில் இருந்தவர்கள், மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.