உலகப் பணக்காரனாக உயர்ந்த 9 வயது சிறுவன்

401
Advertisement

9 வயதிலேயே உலகப் பணக்காரனாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறான் ஒரு சிறுவன்.

நம்மில் பெரும்பாலானோர் 9 வயதில் ஒரு மில்லியன் சொத்துகூட வைத்திருப்பதில்லை. ஆனால், நைஜீரிய சிறுவன் ஒருவன் 6 வயதிலேயே சொந்தமாக ஒரு பங்களாவை சொந்தமாகக் கொண்டுள்ளான். பல சூப்பர் கார்களை சொந்தமாக வைத்திருக்கிறான். உலகம் முழுவதும் தனியார் ஜெட் விமானத்தில் வலம்வருகிறான்.

நைஜீரியா நாட்டின் லாகோஸ் பகுதியைச் சேர்ந்த தம்பதி இஸ்மாலியா முஸ்தபா- முகமது அவல் முஸ்தபா. இவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

சிங்கங்கள் மற்றும் புலிகளுடன் புகைப்படங்கள் எடுத்து தனது இஸ்டாகிராமில் பகிர்வது, ஷாப்பிங் செய்வதில் புதுமை போன்ற செயல்களைச் செய்து அவற்றையும் பதிவேற்றுவது போன்ற செயல்களால் இணையதளவாசிகளைக் கவர்ந்து வருகிறார் இஸ்மாலியா முஸ்தபா.

இணையதளம் மூலம் பிரபலமான இந்தத் தம்பதியின் ஒரே மகன் மோம்பா ஜுனியர், மோம்பா ஜுனியர் தற்போது உலகிலேயே இளம் கோடீஸ்வரன் என்னும் அந்தஸ்தைப் பெற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.

மோம்பாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை 32 ஆயித்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்கிற தகவல் வியப்பை அதிகரிக்கிறது. அதில், தனது அற்புதமான சொகுசு வாழ்க்கைமுறையின் படங்களைப் பதிவிட்டுள்ளான்.

விதம்விதமான பகட்டான ஆடை உடுத்தி, தனது சூப்பர் கார்கள் அருகே நின்று போஸ்கொடுத்து அவற்றைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளான் மோம்பா.
விமானத்தில் அமர்ந்து உணவுண்ணும் புகைப்படத்தையும் பதிவிட்டு அசத்தியுள்ளான்.
இந்த இளம் கோடீஸ்வரனுக்கு 15 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.