தளபதி 67இல் நடிக்க சம்பளமே வேணாம்! விஜயின் திடீர் முடிவு

119
Advertisement

‘வாரிசு’ படத்தை பற்றிய செய்திகளும் சர்ச்சைகளும் ஒரு பக்கம் வந்து குவிய, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

சஞ்சய் தத், கவுதம் மேனன், திரிஷா, நிவின் பாலி, மிஷ்கின் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படும் இப்படத்தில் சூர்யா மற்றும் கமல் ஹாசன் cameo ரோலில் நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 130 கோடி வரை சம்பளமாக விஜய் நிர்ணயிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்திற்காக விஜய் சம்பளம் எதுவும் வாங்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு பதிலாக, படத்தின் வசூலில் ஷேர் கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதே போல, ரஜினிகாந்த் சிவாஜி படத்தில் நடித்ததற்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று பின்னர் வசூலில் ஷேர் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.