விஜய்க்கு விவாகரத்தா? விக்கிப்பீடியாவால் பரவிய வீண் வதந்தி

434
Advertisement

‘வாரிசு’ ஆடியோ லான்ச், வாரிசு பட அப்டேட்கள் என விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடி வரும் அதே வேளையில் தான், வேண்டுமென்றே விக்கிப்பீடியா வாயிலாக சிலர் அவர் மீது வன்மத்தை வெளிப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

விக்கிப்பீடியாவில் இடம்பெறக் கூடிய தகவல்களை தனிநபர்கள் மாற்றி எழுதக் கூடிய அம்சம் பல குழப்பங்கள், தவறான தகவல்கள் பரவுவதற்கு காரணமாக அமைவது மட்டுமில்லாமல் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

விக்கிப்பீடியாவில் விஜயின் சுயவிவர பக்கத்தில் விஜய்க்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாகவும் அவர் வேறு நடிகையுடன் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டு சிலர் அவதூறு பரப்பியுள்ளனர்.

இது போன்ற வதந்திகள் பரவியதால், சர்ச்சை எழுந்த நிலையில் தவறான தகவல்கள் ஒரு சில நிமிடங்களில் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.