‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு வெளியீடு… குஷியில் ரசிகர்கள்…

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ரஜினி நடிக்கும் புதிய திரைப்படம் தற்காலிகமாக “தலைவர் 173” என்ற பெயரில் உருவாகி வந்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், தமிழ் திரையுலகின் இரு முன்னணி நட்சத்திரங்களான கமல் மற்றும் ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், “தலைவர் 173” படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்திற்கு “தர்மன்” என பெயரிடப்பட்டுள்ளது. தலைப்புடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “தர்மன்” திரைப்படம் ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் சமூகப் பின்னணியைக் கொண்ட கதையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைப்பு அறிவிப்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Related News

Latest News