Thursday, March 20, 2025

தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் – தெலுங்கானா அரசு உத்தரவு

பள்ளிகளில் தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ். மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாய பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முந்தைய பி.ஆர்.எஸ். அரசு பல்வேறு காரணங்களால் இந்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news