உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு மையத்தின் நிர்வாகியாக அஞ்சு யாதவ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இவர் நேற்று முன்தினம் பொதுத்தேர்வு வினாத்தாளை அதிகாரிகள் இடம்பெற்றிருந்த வாட்ஸ்அப் குழு ஒன்றில் கசியவிட்டார்.
இதையடுத்து அஞ்சு யாதவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடமிருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.