Friday, January 24, 2025

டாட்டூ விவகாரம் : சிறையில் உள்ள ஹரிஹரனிடம் நாளை விசாரணை

திருச்சியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் நாக்கை வெட்டி அதில் டாட்டூ வரைந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அவரையும் அவருடைய நண்பர் ஜெயராமன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவினர் சிறையில் உள்ள ஹரிஹரனிடம் விசாரணை நடத்த உள்ளனர். குறிப்பாக அவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் எங்கிருந்து கிடைத்தது, இந்த செயல் முறையை எங்கு கற்றுக் கொண்டார்கள், என்பது குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஹரிஹரன் சிறையில் இருப்பதால் சிறைக்குள் சென்று விசாரணை நடத்த சிறை துறையினரிடம் மருத்துவ குழுவினர் அனுமதி கூறியுள்ளனர். இந்த நிலையில் நாளை சிறைக்குள் விசாரணை நடத்த சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நேரம் குறிப்பிடப்படவில்லை. அதனை தொடர்ந்து மருத்துவ குழு நாளை ஹரிஹரனயிடம் விசாரணையை தொடங்கயுள்ளனர். தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் செயல்படும் டாட்டுக்கடைகளிலும் அவர்கள் விசாரணை நடத்த உள்ளனர்.

Latest news