Monday, February 10, 2025

ஒரு வருடத்திலேயே ஒருவர் லட்சாதிபதியாகலாம் – பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து

2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

மிக முக்கியமாக தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது : வரி வரியாக மக்கள் கொண்டாடும் பட்ஜெட். மிக நல்ல ஆரோக்கியமான பட்ஜெட். ரூ.12 லட்சம் வரை வருமான உச்ச வரம்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் ஒரு வருடத்திலேயே ஒருவர் லட்சாதிபதியாகலாம் என தெரிவித்துள்ளார்.

Latest news