Monday, January 20, 2025

தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் வெளியேறினேன் – ஆளுநர் ஆர்.என் ரவி விளக்கம்

நடப்பாண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆளுநரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.

இதற்கிடையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் படப்பட்டதால் பேரவையில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது. பேரவையில் முதலில் தேசிய கீதம் வாசிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என் ரவி முன்பே வலியுறுத்தியிருந்தார்.

தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் அந்த பதிவு நீக்கப்பட்டது. இதனால் மேலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Latest news