ரசிகரைத் திருமணம் செய்ய விரும்பியத் தமிழ் நடிகை

322
Advertisement

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக
15 வருடங்களுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் வலம்வந்த கன்னக்
குழி அழகி மீனா, டிவி சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார்.

பட்டதாரியான மீனா கொரோனா ஊரடங்கில் ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராம்
மூலம் உரையாடினார். அப்போது அவரது ரசிகர் ஒருவர், ”என்னைத் திருமணம்
செய்துகொள்ளுங்கள்” என்று விளையாட்டாகக் கேட்க, ”நீங்கள் மிகத் தாமதமாகக்
கேட்டுள்ளீர்கள்” என்று ஜாலியாகப் பதிலளித்து அருகில் தனது திருமணப் போட்டோவைப்
பதிவிட்டுள்ளார்.

”தங்களுக்குப் பிடித்த நடிகர்” என்று மற்றொரு ரசிகர் கேட்ட கேள்விக்குத்
”தளபதி விஜய்” என்று பதிலளித்துள்ளார். ‘ஷாஜகான்’ படத்தில் விஜயுடன்
”சரக்கு வைச்சிருக்கேன், இறக்கி வைச்சிருக்கேன்” பாடலுக்குக் குத்தாட்டம்
போட்டிருந்தார் மீனா.

கண்ணழகி மீனா உலக நாயகன் கமலுடன் ‘பாபநாசம் 2’ படத்திலும் சேர்ந்து
நடிக்க விரும்புவதாகவும் வேறொரு ரசிகரின் கேள்விக்கு விடையளித்துள்ளார்

நிறைய வறுத்த கோழி வச்சிருப்பார் போல…