அமெரிக்க ராணுவத்தில் தமிழ் நடிகை

3465
Advertisement

அமெரிக்க ராணுவத்தில் ஒரு தமிழ் நடிகை இணைந்து
தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் வெளியான ‘காதம்பரி’ திரைப்படத்தில்
கதாநாயகனின் தங்கையாக அறிமுகம் ஆனவர் அகிலா
நாராயணன். வெறும் 8 பேர் மட்டுமே நடித்துக் குறைந்த
செலவில் தயாரான ‘காதம்பரி’ திரைப்படம் ரசிகர்களைக்
கவர்ந்தது.

அந்தப் படத்தில் நடித்த அகிலா நாராயணன் தற்போது
இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அமெரிக்க வாழ் தமிழச்சியான அகிலா நாராயணன்
பாடகியாகவும் வலம்வந்தார். கலைப்பயணத்தோடு
நாட்டுக்காகவும் சேவை செய்ய விரும்பிய அகிலா
நாராயணன் இப்போது அமெரிக்க ராணுவ வழக்கறிஞர்
ஆகியுள்ளார்.

இதன்மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல்
தமிழ் நடிகை என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்,

இதற்காக அவர், அமெரிக்க ராணுவத்தின் கடுமையான
பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்து பட்டம் பெற்றுள்ளார்..

அமெரிக்கா சென்று பெரிய நிறுவனங்களில் கைநிறைய
சம்பளத்துடன் பணிபுரிய விரும்புவது அநேகம்பேரின்
கனவாக இருக்கும். ஆனால், அந்நாட்டு ராணுவத்தில்
வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்து இந்தியாவுக்கும்
தமிழகத்துக்கும் பெருமை தேடித்தந்துள்ள அகிலா
நாராயணனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள்
குவிந்து வருகின்றன.