உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73.
மும்பையை சேர்ந்த ஜாகிர் உசேன் இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்தார்.
இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் இவர் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார்.
திடீர் நெஞ்சுவலி காரணமாக கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஜாகிர் உசைன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.