கிறிஸ்துமஸ் தாத்தாவின் கல்லறையில் இன்றும் தொடரும் மர்மம்!

274
Advertisement

உலக முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு கலாச்சார குறியீடுகளும் வித்தியாசமான கொண்டாட்ட முறைகளும் பின்பற்ற பட்டாலும் கூட,  குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை விரும்பும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எல்லா நாட்டிலும் ஒரே மவுசு தான்.

இன்றும் தனி நபர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் செயல்பாட்டால் கிறிஸ்துமஸ் தாத்தா உயிர்ப்புடன் இருந்தாலும், ஒரிஜினல் கிறிஸ்துமஸ் தாத்தாவான St.Nicholas கி.பி 343ஆம் ஆண்டில் இறந்து விட்டார்.

ரோம நாட்டில் மைரா நகரின் பேராயரான நிக்கோலஸ், தனது வருவாயை ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யவே செலவழித்தார்.

பல நாடுகளுக்கு பயணப்பட்டிருந்த நிக்கோலஸின் கல்லறை எங்கு உள்ளது என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. தற்போதைய துருக்கியாக இருக்கும் மைராவில் தான் நிக்கோலஸின் கல்லறை உள்ளதாக கூறப்படும் நிலையில், துருக்கியில் அண்டல்யா பகுதியில் உள்ள St.Nicholas தேவாலயத்தில் தான் கல்லறை இருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும், நிக்கோலஸின் உடல் திருடப்பட்டு இத்தாலியில் உள்ள பெசிலிக்கா சான் டி நிக்கோலா தேவாலயத்தில் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துருக்கியில் இருந்து இத்தாலிக்கு நிக்கோலஸின் உடலை எடுத்து சென்ற வழியில் அயர்லாந்தில் உள்ள Newtown Jerpoint பூங்காவில் இரு வீரர்கள் புதைத்து விட்டதாக சொல்லப்படுவதே பெரும்பாலானோரால் நம்பப்படுகிறது.

Jerpoint பூங்காவில் உள்ள கல்லறையும் கூட St.Nicholas உடையது அல்ல என இன்னும் ஒரு தரப்பினர் வாதிட்டு வந்தாலும், இந்த பூங்காவிற்கு வருடந்தோறும் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.