கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சின்ன தல! என்ன காரணம்? Next என்ன Plan?

45
Advertisement

சர்வதேச போட்டிகளில் இருந்து 2020ஆம் ஆண்டே ஓய்வு பெற்ற ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார்.

CSK அணி என்றாலே தோனியும் ரெய்னாவும் தான் என்று சொல்லுமளவுக்கு தல மற்றும் சின்ன தல என இருவரும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தனர்.

2022ஆம் வருடம் ரெய்னாவை சென்னை அணி ஐபிஎல் ஏலத்தில் எடுக்காதது ரெய்னா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

Advertisement

இப்போதும் பல பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வந்த ரெய்னா, மேம்பட்ட Formஉடன் திரும்பவும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணைத்து வகையான கிரிக்கெட் விளையாட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

13 வருட கிரிக்கெட் பயணத்தில் 18 டெஸ்ட், 226 சர்வதேச மற்றும் 78 T20 மேட்ச்களில் விளையாடிய ரெய்னா, செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கும் Road Safety World Seriesஇல் விளையாட உள்ளார்.

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர்களில் ரெய்னா நான்காவது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.