Wednesday, January 22, 2025

Confirm ஆன கே.எல்.ராகுல் கல்யாணம்! பொண்ணு யாரு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுலும் நடிகை அத்தியா ஷெட்டியும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக காதலித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு வரை இருவரும் இந்த relationshipஐ பற்றி வெளியில் அறிவிக்காமலே இருந்தனர்.

இந்நிலையில், அத்தியாவின் தந்தையும் பிரபல பாலிவுட் நடிகருமான சுனில் ஷெட்டி விரைவில் தன் மகளுக்கும் கே.எல்.ராகுலுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பிரம்மாண்டமான ‘ஜஹான்’ இல்லத்தில், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராகுல் அத்தியா திருமணம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

உறவினர்கள், நண்பர்களை தாண்டி முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளபோகும் இந்த திருமணம், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் நிகழ்வாக அமையும் என அத்தியாவின் பெற்றோர் பகிர்ந்துள்ளனர்.

Latest news