சுற்றி சுழன்று மறையும் புழுதி பேய்

274
Advertisement

Dust devil அல்லது புழுதி பேய் என அழைக்கப்படும் தூசி புயல் காற்று, சூடான காற்று விரைவாக குளிர்ச்சியான காற்றுக்கு மேல் செல்லும் போது உருவாகிறது.

காற்றின் குளுமை தன்மை அதிகரிக்கும் பட்சத்தில், புழுதி பேயின் உருவம் சீக்கிரத்தில் மறைந்து விடும்.

காற்றின் வெப்பம் தேவையான நிலையில் தொடர்ந்தால், சில மணி நேரம் வரை புழுதி பேய் கண்களுக்கு தென்படும் என கூறும் ஆராய்ச்சியாளர்கள், Dust devilகளால்  ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்றாலும், அசாத்தியமான வானிலை சூழல்களில், இவைகள் மக்களின் இயல்பு நிலையை பாதிக்கக்கூடும்  என கருத்து தெரிவிக்கின்றனர்.