சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நித்யா என்பவர் நேற்று மாலை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் படம் பார்க்க வந்துள்ளார். இடைவேளை நேரத்தில் தியேட்டர் கேண்டினில் குளிர்பானம் வாங்கியுள்ளார். அந்த குளிர்பானம் காலாவதி ஆகி உள்ளதை பார்த்த அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது காவல்துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் குளிர்பான பாட்டில்களை சோதனை செய்த போது அதிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.