கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பிரியாபட்டினம் அருகேயுள்ள கொப்பா கிராமம் ஜெரோசி காலனியைச் சேர்ந்தவர் பாண்டு. இவர், தனது தந்தை அண்ணப்பாவுக்கு ஒரு கோடி ரூபாய் வரை காப்பீடு செய்துள்ளார்.
தனது தந்தையின் இன்சூரன்ஸ் பணத்தை பெற வேண்டும் என்பதற்காக அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் பாண்டு. இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தனது தந்தையை உருட்டு கட்டையால் பலமாக அடித்துள்ளார். இதில் அண்ணப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து தந்தையின் உடலை அங்கிருந்து எடுத்துச் சென்று சாலையில் வீசிவிட்டு விபத்தில் இறந்து போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவருடைய நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தியுள்ளார் அப்போது இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். பாண்டுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.