மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி வைகை விரைவு ரயிலில் வந்து கொண்டிருந்து. அப்போது விழுப்புரம் அருகே இரயில் வந்த போது இரயில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு வழங்குவதற்காக பிரத்யேகமாக உள்ள உணவு பொருட்கள் தயார் செய்யும் பெட்டியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
ஓடும் ரயிலில் அதிகளவு புகை வெளியேறியதால் இரயிலில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி தீ அணைக்கும் அலாரமான FDSS அலாரம் ஒளித்துள்ளது. இதனால் இரயில் பாதி வழியிலேயே தாமாக நின்றது. தொடர்ந்து உணவு தயாரிக்கும் பெட்டியில் இரயில்வே அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாததால் 30-நிமிடங்கள் காலதாமதமாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து வைகை விரைவு இரயில் சென்னை எழும்பூரை நோக்கி இரயில் புறப்பட்டு சென்றது. பாதி வழியிலேயே இரயில் நிறுத்தப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.