சிப்காட் எனப்படும் தமிழகத் தொழில் மேம்பாட்டு கழகத்தின் வருவாய் அலுவலராக பணியாற்றி வருபவர் சூரிய பிரகாஷ். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில், கரூரில் வருவாய் அலுவலராக பணியாற்றிய போது, டெக்ஸ்டைல் தொடர்பான ஆர்டரை பெற்று தருவதாக கூறி ரூ.15 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து கடந்த 2024 ஆம் ஆண்டில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் கரூர் குற்றப்பிரிவு போலீசார், சூரிய பிரகாஷை சென்னையில் வைத்து கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து சென்று மோசடி தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.