Sunday, December 14, 2025

வருஷத்துக்கு 2 முறைதான் ஷாப்பிங்…சிக்கனம் கற்றுத்தரும் யூட்யூபர் !

கணவன் மனைவி உள்ள குடும்பத்தையோ, ஒரு குழந்தை இரு குழந்தை உள்ள குடும்பத்தையோ வரவு செலவு செய்து ஓட்டுவதே பெரும் காரியமாக இருக்கும் இந்த காலத்தில் ஒரு அம்மா 5 குழந்தைகள் கொண்ட 7 பேர் சேர்ந்த குடும்பத்தை சிக்கனமாக ஓட்டுவதற்கான வழியை குறிப்பிடுகிறார். யூட்யூபரும் குடும்பத்தலைவியுமான தபித்தா கெல்லி அவரது யூட்யூப் சேனலில் இதற்கான வழியை குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/explore/locations/419614710/michigan/?utm_source=ig_embed&ig_rid=06dc996d-e1e0-4c4e-87f1-a300269c18b8

இவர் அவரது குடும்பம் முழுவதற்கும் ஒரு வருடம் முழுக்க தேவைப்படும் பொருட்களை வருடத்தில் இரண்டே முறை கடைக்கு சென்று வாங்குவாராம். அதிலேயே அந்த வருடம் முழுவதும் ஏழு பேரும் உணவு உண்பதற்கு, வீட்டிற்கு தேவையான பொருட்கள் அடங்கி விடுவதாக கூறுகிறார். தபித்தா பேசுகையில், “நாங்கள் வாங்கும் பொருட்கள் 4 முதல் 6 மாதங்கள் வரை வரவேண்டும் என்பதற்காக  பர்சேஸ்  செய்யவே எங்களுக்கு ஒரு நாள் ஆகும். காலை 10 மணிக்கு கடை திறந்ததும் உள்ளே செல்வோம், பிறகு சாயுங்காலம் 4 மணியை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் எங்களது பர்சேஸ். கிட்டத்தட்ட இரவானதும் தான் வெளியில் வருவோம். இதன் மூலம் எங்கள் அனைவருக்கும் எந்த தடையுமின்றி சில மாதங்கள் உணவு கிடைத்துக்கொண்டே இருக்கிறது. நாங்கள் பெரும்பாலும் ரெஸ்டாரண்ட்டிற்கு செல்வதே இல்லை.” என்று கூறுகிறார்.

பின்னர் அந்த வீடியோவில்  அவரது சமையலறையை காண்பிக்கிறார்.அதில், உணவு பொருட்கள், வீடு சுத்தம் செய்யும் பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என அனைத்தும் உள்ளது. இத்தனை பொருட்களை எங்கு சேமித்து வைக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா. அவர்கள் பேஸ்மெண்டில் இதற்கென தனி அறை வைத்துள்ளனர். சில சமயங்களில் அங்கு இடம் பற்றாமல், சமையலறையிலும், வீட்டு ஹாலிலும் வைப்பதாகவும் கூறுகிறார். இருப்பினும் இன்னொரு கேள்வி எழுகிறது அல்லவா… இந்த உணவுப்பொருட்களுள் சில எக்ஸ்பயர் ஆகிவிட்டால் என்ன செய்வது? அதற்க்குத்தான் அத்தனை திட்டமிடல்களும், ஒரு நாள் ஷாப்பிங்கும் என்று  விடையளித்து விடைபெறுகிறார்  தபித்தா.

Related News

Latest News