Friday, January 24, 2025

தனியார் பள்ளி அருகே ஆறு போல ஓடும் சாக்கடை நீர்..!!

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 70 வது வார்டு நேரு நகர் நீதித்தெரு காவியன் அப்பார்ட்மெண்ட் பின்புறம் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு செல்லும் வழியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை நீரானது ஆறு போல ஓடிக் கொண்டிருக்கிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் அந்த பாதாள சாக்கடை நீரில் நடந்தே தான் செல்கிறார்கள். இதனால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகும் தகவல் வந்துள்ளது.

கடும் துர்நாற்றத்துடன் பாதாள சாக்கடை ஆறு போல சாலையில் தேங்கி இருப்பது அப்பகுதியில் பெரும் நோய் தொற்று அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை என அது அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Latest news