சமோசாவில் சீரியல் நம்பர்

217
Advertisement

வரிசை எண், எழுத்துகளுடன் உள்ள சமோசாவின் படங்கள் சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளன.

கையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பல தற்போது எந்திரங்களில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தயாரிப்பு தேதி, அளவு, பயன்பாடு உள்ளிட்ட விவரங்களுடன் பேக்செய்யப்பட்டு சாதாரண மளிகைக் கடைகள்முதல் சூப்பர்மார்க்கெட்டுகள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறன்றன.

என்றாலும், கையாலேயே செய்யப்படும் வடை, பஜ்ஜி, சமோசா போன்ற உணவுப்பொருட்கள் தயார்செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்பனையாகிவிடும் என்பதால், பேக்கிங் செய்யப்படாமல் அதற்கென்று Brand Name, Batch Number, தயாரிப்பு தேதி போன்ற விவரங்கள் இன்றியே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சமோசாவிலும் புகுந்துவிட்டது.

அண்மையில், ஹரியானா மாநிலம், குர்கான் நகரைச் சேர்ந்த நிதின் மிஸ்ரா தனது நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக சமோசா பார்ட்டி என்னும் நிறுவனத்திடம் சமோசாக்களுக்கு ஆர்டர்கொடுத்திருந்தார்.

அந்த ஆர்டருக்கான சமோசாக்கள் அவருக்கு சப்ளை செய்யப்பட்டது. அந்த சமோசாக்களில் சமோசா பார்ட்டி என்னும் முத்திரைப் பெயரில் எண்களும் எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு குழப்பமும் ஆச்சரியமும் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து தனது ட்டுவிட்டர் பக்கத்தில் அந்த சமோசாக்களின் படங்களைப் பதிவிட்டுத் தொழில்நுட்பம் தயவுசெய்து எனது வியாபாரத்திலிருந்து விலகியிருக்கக்கூடாதா என்று சலிப்புடன் கேட்டுள்ளார்.

இதைப் பார்த்த திருமணமாகாத இளைஞர்கள் சிலர் சட்னி, சாம்பார் போன்ற உணவுப் பொருட்களையும் இப்படித் தயார்செய்து தருவார்களா என்று அக்கறையோடு கேட்டுள்ளனர்.

திருமணம் செய்துகொண்ட ஆண்களோ… இந்த விஷயம் தங்கள் மனைவியின் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்று பயத்தில் உள்ளனர்.

ஒரு வாரத்துக்குமுன் சமைத்த சாம்பாரை பிரிட்ஜில் வைத்திருந்து அவ்வப்போது எடுத்து சுடவைத்து சுடவைத்து மனைவி பரிமாறும் காட்சி அவர்கள் கண்முன் வந்து போவதே இதற்குக் காரணம்…