பிரபல சின்னத்திரை நடிகரான செந்தில், மோசடி கும்பலால் பணத்தை இழந்துவிட்டதாக கூறி, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் செந்தில் பிரபல சின்னத்திரை சீரியலில் நடித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இந்நிலையில் தான் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன் என அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். தனக்கு தெரிந்த தொழிலதிபரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வேண்டும் என கூறி மெசெஜ் வந்தது என்றும் அவர் சொன்ன நம்பருக்கு பணத்தையும் அனுப்பி விட்டேன், பின்பு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தொழிலபதிபரின் வாட்ஸ் அப்பை யாரோ ஹேக் செய்து, 500 பேரிடம் இருந்து பணத்தை ஏமாற்றியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவே இந்த வீடியோவை பகிர்ந்துள்ளேன் என நடிகர் செந்தில் கூறியுள்ளார்.