பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் கிளம்பியது. தமிழநாடு முழுவதும் சீமான் மீது வழக்கு பதிவு செய்யயப்பட்டது. அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சென்னையில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உட்பட 180 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சீமான் வீடு முற்றுகை போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்குவதற்காக சீமான் வீட்டில் பதுங்கி இருந்ததாக 180 பேர் மீது சென்னை நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.