கரும்பு சாப்பிட்டதும் தண்ணி குடிச்சுடாதீங்க! காரணமா தான் சொல்றோம்

374
Advertisement

பொங்கல் பண்டிகை காலங்களில் உதடு வெந்துவிட்டது என மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளையும், பெரியவர்களையும் அதிக எண்ணிக்கையில் பார்க்க முடியும்.

அதற்கு காரணம், கரும்பு சாப்பிட்ட உடனே அவர்கள் தண்ணீர் குடித்திருப்பார்கள்.

அவ்வாறு, தண்ணீர் குடிக்கும் போது வாய் முழுக்க நமைச்சல் எடுத்து சிறு சிறு கொப்புளங்கள் வர வாய்ப்புள்ளது. அது மட்டுமில்லாமல் அடி வயிற்று வலி, உப்புசம், நெஞ்சு இறுக்கம், அல்சர் மற்றும் தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் நிலை கூட வரலாம்.

இதற்கெல்லாம், கரும்பில் அதிகப்படியாக உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் தான் காரணம். கரும்பு சாப்பிடும்போது கால்சியம் என அழைக்கப்படும் இந்த சுண்ணாம்பு, எச்சிலுடன் இணைந்து சில வேதியியல் மாற்றங்கள் நடக்கின்றன.

அந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கும் போது உடலில் உள்ள சூடு கிளம்பி இது போன்ற அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. கரும்பு சாப்பிட்ட உடன் ஒரு மெல்லிய தாகம் ஏற்படும். ஆனாலும், உடனே தண்ணீர் குடிக்காமல் குறைந்தது 15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடித்தால் இது போன்ற தேவையற்ற சிரமங்களை தவிர்க்கலாம்.