தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேனி மாவட்டத்தில் கடந்த ஓர் ஆண்டுகளில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வெளியிடப்பட்டது.
பொது மக்களின் தொலைபேசி எண்களுக்கு டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் வருமானவரித்துறையினர் மற்றும் கஸ்டம்ஸ் மற்றும் சைபர் க்ரைம் போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவைகளுக்கு தொடர்புள்ளதாக பொதுமக்களுக்கு தொலைபேசி மற்றும் வீடியோ கால் மூலம் பணம் பறிக்கும் செயல் பட்டு வருகின்றனர்.
இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் தேனி மாவட்டத்தில் இதுவரை மூன்று கோடி ரூபாய் வரை டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் தங்களுடைய வங்கி கணக்கு உள்ள பணம் ஏமாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற போலியான அழைப்புகள் வந்தால் அருகே உள்ள காவல் நிலையங்கள் அல்லது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அல்லது 1930 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வெளியிடப்பட்டது.