சிலிர்க்க வைத்த சிறுவனின் சல்யூட் வைரல் வீடியோ

324
Advertisement

விமானப் படை அதிகாரிக்கு சல்யூட் அடித்த சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காண்போரை நெகிழவைக்கும் அந்த வீடியோவில், விமான நிலையத்துக்குள் வரும் சிறுவன் பணியிலிருக்கும் சிஎஸ்ஐஎஃப் வீரர் தன்னைப் பார்ப்பதைக் கவனிக்கிறான். உடனே சில விநாடிகள் அப்படியே நின்று பாதுகாப்பு அதிகாரிக்கு நன்கு பயிற்சிபெற்ற அதிகாரிபோல் விரைப்பாக சல்யூட் அடிக்கிறான். பதிலுக்கு அதிகாரியும் சல்யூட் அடிக்கிறார்.

இந்தச் சிறுவனின் செயல் பெங்களூரு விமான நிலையத்தில் நிகழ்ந்ததாக மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தனது ட்டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

அந்தப் பதிவில், ”பெங்களூரு விமான நிலையத்தில் ஓர் இளம் இந்தியர் எங்கள் ஆட்களுக்கு சல்யூட் அடிக்கிறார். மரியாதை மற்றும் தேசபக்தி இளம்வயதிலே தேசபக்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ அனைவரையும் ஈர்த்து வருகிறது. வலைத்தளங்களில் சிறுவனைப் பாராட்டி கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.