Wednesday, February 18, 2026

நடிகர் சயிப் அலிகானை தாக்கிய நபர் சத்தீஸ்கரில் கைது

மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் கடைசி 4 தளத்தில் நடிகர் சயீப் அலிகான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 15ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டில் திருடுவதற்காக உள்ளே புகுந்த மர்ம நபர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியுள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நடிகர் சயிப் அலிகானை குத்திய மர்ம நபர் CCTV காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சயிப் அலிகானை குத்திய நபர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் ரயில் நிலையத்தில் கைது செய்யபட்டார். முதல்கட்ட விசாரணையில் அவரது பெயர் ஆகாஷ் கனோஜியா (வயது 31) என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட வாலிபரை அழைத்து வந்து விசாரணை நடத்த மும்பை போலீசார் சத்தீஷ்கார் விரைந்து உள்ளனர்.

Related News

Latest News